Featured Posts

[Blogger][feat1]

பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்காகப் பிரார்த்திப்போம் (குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை)

 

பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்காகப் பிரார்த்திப்போம்


குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்காகப் பிரார்த்திப்போம்

யூத இராணுவத்தினாலும், தீவிரவாதக் குழுக்களாலும் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் மிகப் பெரும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். யூதக் கொடுங்கோலர்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவற்றை அபகரிப்பதற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்களின் மூன்றாவது முக்கிய இறையில்லமான பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் வழிபாடு நடத்துவதை தடுத்து பாலஸ்தீன இஸ்லாமியர்கள் மீது யூதப் பயங்கரவாத இராணுவம் மிகப் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

பாலஸ்தீன முஸ்லிம்களின் அவலங்கள் நீங்குவதற்காக இறை உதவியை வேண்டி கடமையான ஐங்காலத் தொழுகைகளில் அவர்களுக்காக சோதனைக்கால பிரார்த்தனையை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

குனூத்துன் நாஸிலா தொடர்பான சட்டதிட்டங்களைக் காண்போம்.

குனூத் நாஸிலாவின் நோக்கம்

குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும்  காலகட்டங்களில்  ஓதியுள்ளார்கள்.

و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் ‘உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்’என்றும் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 1201

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِ…. إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ

நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

 நூல்: புகாரி 1002

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.

நபியவர்கள் ஒருமாத காலம் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.

எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.

கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்

சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.

கடமையான தொழுகைகளில் கடைசி இரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள்.

 இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.

நூல்: புகாரி 798, 1004

و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)

 நூல்: முஸ்லிம் 1207, 1208

797 بَاب حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَأُقَرِّبَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ  رواه البخاري

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர் , இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில்  இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

நூல் : புகாரி (797)

சுருக்கமாக ஓத வேண்டும்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (2 / 32)

1001- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدٍ قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (சோதனைக்கால) குனூத் ஓதினார் களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்’ என்று பதிலளித்தார்கள். ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ருகூஉவுக்குப் பின்பு குறைந்த நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி (1001)

மேற்கண்ட ஹதீஸ் சோதனைக் கால குனூத் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

இன்றைக்கு சவூதி உட்பட சில நாடுகளில் இந்த சோதனைக் கால குனூத்தினை மிக நீண்ட நேரம் ஓதுகின்றனர். ஆனால் இதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது.

நபியவர்கள் இந்த சோதனைக் காலப் பிரார்த்தனையை மிகவும் சுருக்கமாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் எவ்வாறு சோதனைக் கால பிரார்த்தனை செய்தார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 104)

6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்’ ஓதினார்கள். அதில்,

இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்

நூல் : புகாரி (6393)

நபியவர்கள் செய்த பிராரத்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எனவே நாமும் இதே அளவிற்கு மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

யா அல்லாஹ் ! பர்மாவில் ராக்கைன் மாநிலத்தில் பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!

அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!

இறைவா பர்மாவில் அநியாயம் செய்யும் கூட்டத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக!

என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.

கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.

مسند أحمد بن حنبل – (3 / 137)

 12425 – حدثنا عبد الله حدثني أبي ثنا هاشم وعفان المعني قالا حدثنا سليمان عن ثابت قال كنا عند أنس بن مالك …. فقال أنس فما رأيت رسول الله صلى الله عليه و سلم وجد على شيء قط وجده عليهم فلقد رأيت رسول الله صلى الله عليه و سلم في صلاة الغداة رفع يديه فدعا عليهم ….

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராக பிரார்த்னை செய்ததை நான் பார்த்தேன்.

நூல் : அஹ்மத் (12425)

சோதனைக் கால குனூத்தில் நபியவர்களை கைகளை உயர்த்தி பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே நபியவர்கள் செய்ததைப் போன்று இமாமும், பின்பற்றி தொழுபவர்களும் கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.

சப்தமாக பிரார்த்திக்கலாமா?

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 104)

6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்’ ஓதினார்கள். அதில்,

இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்

நூல் : புகாரி (6393)

மேற்கண்ட செய்தியில் இமாமாக தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையை நபித்தோழர்கள் செவியேற்றுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே இமாமாக தொழுவிப்பவர் பிரார்த்தனையை வெளிப்படுத்திச் செய்யலாம். ஆனால் மிகவும் உரத்த சப்தத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும். பணிவை வெளிப்படுத்தும் வகையில் இமாம் தனது பிரார்த்தனையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பற்றி தொழுபவர்கள் கைகளை உயர்த்தி பணிவாகவும் இரகசியமாகவும் பிராரத்தனை செய்ய வேண்டும்.

ஜூம்ஆ உரையில் மழை வேண்டிப்  பிரார்த்திக்கும் போது ”அல்லாஹும் மஸ்கினா” (இறைவா எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக) என்ற துஆவை நபியர்கள் மக்களுக்கு கேட்கும் விதமாக செய்துள்ளார்கள். மக்களும் அதே பிரார்த்தனையை தங்கள் கைகளை உயர்த்தி சப்தமின்றி செய்துள்ளனர் (பார்க்க புகாரி 1029, 1013, 1014) இதன் அடிப்படையில் சோதனைக் கால குனூத்திலும் நடைமுறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆமீன் கூற வேண்டுமா?

சோதனைக் கால குனூத்தின் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்ல வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய  அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தி்ல் “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபியவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.

நூல் : அபூ தாவூத் (1231), அஹ்மத் ( 2610)

இன்னும் பல நூற்களில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹிலால் பின் ஹப்பாப்“ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் உறுதிப் படுத்தியிருந்தாலும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

 (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11 பக்கம் 69)

பொதுவாக மூளை குழம்பியவரின் அறிவிப்பை ஏற்பதாக இருந்தால் அவரிடமிருந்து அறிவிக்கும் மாணவர் அவர் மூளை குழம்புவதற்கு முன் கேட்டாரா அல்லது மூளை குழம்பிய பின் கேட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைப்பதை வைத்தே முடிவு செய்யப்படும்.

இந்த அறிவிப்பில் அதை தெளிவுபடுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்காததால் இச் செய்தி நிறுத்தி வைக்கப்படும். தெளிவு கிடைக்கும் வரை இதைக் கொண்டு அமல் செய்ய முடியாது.

எனவே சோதனைக் கால குனூத்தின் போது இமாம் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் சொல்வது கூடாது.

இமாமும் பிராரத்தனை செய்ய வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இதர செய்திகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.

தமிழில் பிராரத்திக்கலாமா?

நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் இரண்டு விதமாக உள்ளது. ஒன்று நபியவர்களே அமைத்துதந்த பிரார்த்தனை வாசகங்கள்.

கழிப்பிடத்திற்கு செல்லும் முன் ஓதும் துஆ, பிறகு ஓதும் துஆ, தூங்கும் முன்பும், பின்பும் ஓத வேண்டிய துஆக்கள், சாப்பிடும் முன்பும் பின்பும் ஓத வேண்டிய துஆக்கள் இது போன்ற அன்றாடம் ஒத வேண்டிய பிரார்த்தனைக்கான வாசகங்களை நபியவர்களே கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொருவரும் இது போன்ற நிலைகளில் நபியவர்கள் எந்த வார்த்தைகளைக் கூறினார்களோ எந்த மொழியில் கூறினார்களோ அது போன்றுதான் கூற வேண்டும். இதில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் நபிகளார் கற்றுத்தந்த அரபி மொழியிலும்கூட அதே போன்ற அர்த்தமுடைய வேறு சொல்லை அந்த துஆக்களில் நாம் நமது விருப்பப்படி சேர்ப்பதற்கு மார்க்கம் தடை விதித்துள்ளது.

மற்றொரு வகைப் பிரார்த்தனை நாமாகத் தேர்ந்து எடுத்து சுயமாகச் செய்ய வேண்டிய பிரார்தனைகள் ஆகும். அதாவது பிராரத்தனையில் என்ன கேட்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள பிரார்த்தனைகள்.

அத்தஹிய்யாத் இருப்பின் இறுதியில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைக் கேட்க வேண்டும் என்றால் அவரவருக்குத் தெரிந்த மொழியில் கேட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அது போன்று தொழுகையில் ஸஜ்தாவின் போது பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஸஜ்தாவின் போது நமக்குத் தேவையானவற்றை நமக்குத் தெரிந்த மொழியில்தான் நாம் பிராரத்திக்க முடியும்.

இது போன்று என்ன பிரார்த்திக்க வேண்டும் என்பது பிராரத்திப்பவர் முடிவு செய்ய வேண்டிய பிராரத்தனைகளாக இருந்தால் அதனை நமக்கு தெரிந்த மொழிகளில் நாம் செய்து கொள்ளலாம்.

நபியவர்கள் காலத்தில் ரிஅல், தக்வான் உட்பட சில சமுதாயத்தினர் முஸ்லிம்களைக் கொன்றனர். எனவே அவர்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

எனவே நாம் தற்போது அதே வார்த்தைகளைச் சொல்வது பொருத்தமற்றதாகும். தற்போது பர்மிய இராணுவமும், ஆட்சியாளர்களும், பவுத்த தீவிர வாத குழுக்களும் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே நாம் அநியாயம் செய்யும் இவர்களைக் குறிப்பிட்டுதான் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனவே யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாக பிரார்ததனை செய்ய வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர்தான் தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் இதனை அவரவர் தாய்மொழியில் செய்ய வேண்டும். தமிழ் மொழி பேசுவோர் தமிழிலும், உருது, தெலுங்கு , கன்னடம், மலையாளம்,  ஹிந்தி,  ஆங்கிலம், அரபி என அவரவர் பேசும் மொழியில் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.


பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்காகப் பிரார்த்திப்போம் (குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை) பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்காகப் பிரார்த்திப்போம் (குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை) Reviewed by Kings of Islamic e-Dawah on May 15, 2021 Rating: 5

தர்கா ஸியாரத்

January 15, 2021

 

தர்கா ஸியாரத் 


 

2304 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ
زَارَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ « اسْتَأْذَنْتُ رَبِّى فِى أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ فِى أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِى فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ ».

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம். 

 (நூல்: முஸ்லிம் 1777)

அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.

3313- حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ ، عَنِ الأَوْزَاعِيِّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ : حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ ، قَالَ : حَدَّثَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ ، قَالَ :
نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنْ يَنْحَرَ إِبِلاً بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم ، فَقَالَ : إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلاً بِبُوَانَةَ ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ ؟ قَالُوا : لاَ ، قَالَ : هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ ؟ قَالُوا : لاَ ، قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : أَوْفِ بِنَذْرِكَ ، فَإِنَّهُ لاَ وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللهِ ، وَلاَ فِيمَا لاَ يَمْلِكُ ابْنُ آدَمَ.

‘புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். ‘அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை’ என்றார். ‘இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை’ என்றார். ‘அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில் பிரம்மாண்டமான கட்டிடம்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும், பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?

விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.


186 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ –
قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ».

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 78

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை. 

 

 

 



 

 

தர்கா ஸியாரத் தர்கா ஸியாரத் Reviewed by Kings of Islamic e-Dawah on January 15, 2021 Rating: 5

என் அருமை கலீபா

January 09, 2021

 

 என் அருமை கலீபா 

உமர் பின் கத்தாப்

(ரலியல்லாஹு அன்ஹு)

Quiz: Do You Know These Facts About Umar ibn Al-Khattab? | Deenspiration

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே என் இளைஞர் சமுதாயமே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

உமர் இப்னு அல்-கத்தாப் இயற்பெயர் கொண்ட உமர் (ரலி) அவர்களின் சிறப்புகளை ரத்தின சுருக்கமாக கண்மனி நாயகம் (ஸல்அவர்களின் வாயிலாக அறியும் பாக்கியம் பெறுவீர்களாக!

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனேஅங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள். அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி). நூல்: புஹாரி : 3242 

நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்எனக் கேட்டதற்கு மார்க்கம் ‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”. அறிவிப்பவர் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி). புஹாரி : 23

நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘கல்வி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பவர்  இப்னு உமர் (ரலி). புஹாரி: 82

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் உமர் (ரலி) அவர்களை இவ்வாறு சிறப்பித்துக் கூற வேண்டும் அப்படி அவர் மனிதனாக வாழ்ந்து என்னத்தான் சாதித்துள்ளார் என்று உங்கள் உள்ளம் சிந்திக்கின்றதா அப்படியெனில் வாருங்கள் உங்கள் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வரலாற்றிற்குள் பிரவேசிப்போம்.


பெயர்    :    உமர் இப்னு கத்தாப் (என்கிற)  உமர் பின்   கத்தாப் (ரலி)

தாய் பெயர்    :    கந்தமா

தந்தை பெயர்    :    கத்தாப்

மனைவிகள்        :    கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி ,ஜைனப் பின் மாஸியுன் ,மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய் (என்கிற) உம்மு குல்தூம்

குழந்தைகள்    :    அப்துல்லாஹ் மற்றும் ஹஃப்ஸா


தலைப்புகள்

  • சிறுவயதில் பட்ட இன்னல்கள்
  • முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய துணிந்த வாள்! 
  • அமீருல் முஃமினீன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) இஸ்லாத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவர் என்பதற்கு வரலாறு சான்று!
  • உயரிய கலீபா பதவிக்கு ஆசைப்படாதவருக்கு கிடைத்த கண்ணியம்!
  • வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்கள்

  1. ஏழை பெண்ணுக்காக முதுகில் மூட்டை சுமந்த கலீபா உமர் (ரலி)

  2. ஏழை கர்பிணிக்கு தன் மனைவியைக் கொண்டு பிரசவம் பார்த்த கலீபா உலகில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததுண்டா? நடக்குமா?

  3. மூதாட்டியின் உத்தரவுக்கு கட்டப்பட்ட கலீபா உமர் (ரலி)

  4. புகழை வேறருத்த கலீபா உமர்பின் கத்தாப்

  5. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் மரணமும் கட்டளையும்

 

சிறுவயதில் பட்ட இன்னல்கள்


மக்கா மாநகரை விட்டும் 10 மைல் தொலைவிலுள்ள புறவெளிப்பகுதியான தஜ்னான் என்ற பகுதியில் இளமைப் பருவத்தில் ஆடு, ஒட்டகம் மேய்த்து வந்தவர்தான் இந்த உமர் பின் கத்தாப்.

அச்சமயம் வெயிலின் தாக்கம் ஏற்பட்டு களைப்புடன் அமர்ந்தால் சுல்லென்று சாட்டையால் அடி விழும் அடிப்பவர் வேறு யாருில்லை தந்தை கத்தாப் அவர்கள்தான் காரணம் அன்றைய காலகட்டத்தில் ஆடு, ஒட்டகம் மேய்ப்பதால்தான் வருமானம் பெருகும். இவ்வாறு தாம் பட்ட பிற்காலத்தில் உமர் (ரலி) அவர்கள் எப்பொழுதெல்லாம் தஜ்னான் பகுதியை கடந்து செல்வார்களோ அவ்வப்பொழுதெல்லாம் தம் தோழர்களிடம் சொல்லி கண்ணீர் விடுவாராம். (மாஷா அல்லாஹ்)

அஜமிகளாக பல்வேறு சிலைகளை வணங்கிவந்த அன்றைய கால கட்டத்தில் கல்வியும், எழுத்தறிவும் மிகவும் ஒரு அரபிக்கு கிடைப்பது மிக மிக கடினம் ஆனால் உமர்(ரலி) அவர்களோ, எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்கள். அன்றைய மக்காவில் எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் மொத்தமாக கூட்டி கழித்தாலும் 17 நபர்களே அவர்களில் ஒருவராக இருந்தவர்தான் உங்கள் உமர் பின் கத்தாப் (ரலி). (மாஷா அல்லாஹ்)


முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய துணிந்த வாள்! 

 

மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தை சேர்ந்த கந்தமா மற்றும் கத்தாப் ஆகியோரது மகனாகவும் தாய்மாமன் உறவில் அபூ ஜஹ்ல்-உடனும் இருந்தவர் எந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது பகையுணர்வோடு இருந்திருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள் பயமாக உள்ளதா? அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளுடன்தான் வாழ்ந்து வந்தார் உங்கள் இளைஞன் உமர்.

ஒருநாள் இறைத்தூதர் என்று கூறிக்கொண்டு ஏக இறை கொள்கையை எத்திவைக்கும் முஹம்மது என்ற மனிதரை கொல்ல வேண்டும் என்ற துடிப்புடன் தன் கூறிய உடை வாளை உருவியவாரு வாளும் கையுமாக வீட்டை விட்டு வெளியேறியனார் உமர்!

வழியில் நுஐம் (ரலி) என்பவர் இடை மறிக்கவே முஹம்மதைக் கொன்று விட்டு, கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகின்றேன் என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் உமர்.

உடனே நுஐம் (ரலி) அவர்கள் உமரின் மனதை திசை திருப்ப நாடி உன் சகோதரியும், மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்கள் அவர்கள் இந்நேரம் குர்ஆன் வசனங்களை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம், அவர்களைப் போய் கவனியும் என்று நல்லறிவு கூறுகிறார்.

இதை சற்றும் சகித்துக் கொள்ள இயலாத உமர் நெருப்பின் தனலைப் போன்ற ஆத்திரத்துடன் தங்கையின் வீட்டை நோக்கி மின்னலென செல்கிறார் அங்கு எதேச்சையாக குர்ஆனின் வசனங்களை முனுமுனுத்துக் கொண்டிருந்த மைத்துனரின் சடடையைப் பிடித்து உமது முன்னோர்கள் மற்றும் மூதாதையர்கள் மார்க்கத்தை வெறுத்து விட்டீரே! என்று மிரட்டல் விட நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்று அழகிய முறையில் கம்பீர குரலில் பதிலளிக்கிறார் உமரின் மைத்துனர் ஸயீத் (ரலி) அவர்கள்.

இதைக் கேட்டவுடன் உமரின் கண்களில் எரிமலை குழம்பு வெடித்தது போன்று ஆத்திரமடைகின்றது கோபம் தலைக்கேறுகிறது அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று உண்ணிப்பாக கவனித்த தங்கை ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமருக்கும் தன் கணவருக்கும் இடையில் திறையாக வந்து நின்றுவிடுகிறார், பின்னர் என் கணவரை விட்டுவிடும் எனது கணவர் மீது கை வைப்பது சரியல்ல என்று எச்சரிக்கிறார்.

மேலும் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம். இதற்காக நீர் என்னையும் என் கணவரையும் கொலை செய்ய வந்திருப்பீரென்றால் தாராளமாக தயவு தாட்சணியமின்றி  எங்களைக் கொன்று விடுங்கள் ஏனெனில் சத்தியத்தை ஏற்றவர்கள் எவருடைய மிரட்டலுக்கு அஞ்சுவதுமில்லை அடிபணிவதுமில்லை என்று பதிலளிக்கிறார். (அல்லாஹு அக்பர்)

எரிமலையாக வெடித்த கோபம் அன்புத் தங்கையின் மென்மையான குரலுக்கு அடிபணிகிறது சற்றே மனம் தடுமாறுகிறது தன்னை சுதாறித்துக் கொள்கிறார் பிறகு அங்கு கண்ணீர் சிந்தும் அன்புத் தங்கையிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்து முஹம்மது என்ற அந்த மனிதர் கொடுத்த குர்ஆன் வசன ஓலையை என்னிடம் காண்பியுங்கள் என்றார்! (அல்லாஹு அக்பர்)

ஆசைத் தங்கையும் மைத்துணரும் தங்களிடமிருந்த அரிய பொக்கிஷமான அல்குர்ஆனின் அத்தியாயம் தாஹா எழுதப்பட்ட ஓலையை கொடுக்கிறார்கள். முதல் முறையாக அந்த வசனத்தை ஓத ஆரம்பிக்கிறார் கல் நெஞ்சம் கரைகிறது உள்ளம் பிரகாசிக்கிறது உடனே சற்றும் யோசிக்காமல் மின்னலாய் ஸஃபா குன்றினை நோக்கி அதாவது தாருல் அர்க்கம் நோக்கி மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்திக்க செல்கிறார்.

முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்ய கூறிய உடைவாளுடன் சென்ற உமரின் கைகளை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது திருக்கரங்களை நீட்டுகிறார்கள் உமரோ சற்றும் சிந்திக்காமல் தனது கரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில் வைத்து, வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை”” என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். (அல்லாஹு அக்பர் அல்லாஹ்வுக்கே என்றும் வெற்றி!)

இஸ்லாத்தை ஏற்ற உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற உயிர்த் தோழறாக மாறுகிறார் பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை மார்க்கத்திற்காக அர்பணித்து வாழ்கிறார் அவர் எவ்வாறு மார்க்கத்திற்காக உழைத்தார் என்பதை இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளால் விளங்கிக்கொள்வீராக!

நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்எனக் கேட்டதற்கு மார்க்கம் ‘என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்”. அறிவிப்பவர் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி). நூல் புஹாரி : 23


அமீருல் முஃமினீன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) இஸ்லாத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவர் என்பதற்கு வரலாறு சான்று!

இஸ்லாத்தை அல்லாஹ் தனது இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக முழுமைப் படுத்துகிறான், நபிகளாரும் தம் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு இறுதிப் பேருரையும் நிகழ்த்தி விடுகிறார் காலங்கள் செல்கின்ற இஸ்லாம் அழகாக மலரும் காலத்தில் எதிர்பாராத விதமாக அரபுச் சக்கரவர்த்தியும் இறுதி நபியுமாகிய கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கி.பி.632ல் இம் மண்ணுலகை விட்டு பிறிகிறார்கள். (இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்)

இஸ்லாம் தன்னுடைய கண்ணியமிக்க தலைமைத்துவத்தை இழந்து தவிக்கும் சூழல் கண்டு துவண்டுவிடுகிறார்! இஸ்லாம் எனும்  அழகிய கோட்டை தகர்ந்துவிடக்கூடாது, அதிகார போட்டியால் தலைமைத்துவத்திற்கு புரட்சி வெடித்துவிடக்கூடாது என்று கருதிய உமர் பின் கத்தாப் (ரலி) சற்றும் சிந்திக்காமல் சீரிய முடிவு ஒன்றை எடுக்கிறார் விளைவு இஸ்லாத்தின் முதல் கலீபாவாக அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) பிரகடனப்படுத்தப்படுதல். (சுபுஹானல்லாஹ்)

தலைமைத்துவத்தை தாங்கிப்பிடிக்க இஸ்லாம் எனும் கோட்டைக்கு தூணாக தம்மை சமர்பித்து சக தோழர்களுடன் தோளோடு தோள் கொடுத்து சங்கை மிகு அபூபக்கர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் முதல் கலீபாவாக முன்மொழிந்த பாக்கியத்திற்கு சொந்தக்காரர் உங்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆவார்கள்.

குழப்பமான காலகட்டத்தில் தெளிவான முடிவை எடுப்பவர்களில் முதன்மையானவர் அமீருல் முஃமினீன் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) எனும்போது ஈமான் கொண்ட நெஞ்சங்கள் சந்தோஷத்தில் தத்தளிப்பதை நேரில் பார்ப்பது போன்று தோன்றுகிறது நம் உள்ளத்தில்! (அல்ஹம்துலில்லாஹ்)


உயரிய கலீபா பதவிக்கு ஆசைப்படாதவருக்கு கிடைத்த கண்ணியம்!

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பதவியேற்ற இஸ்லாத்தின் கண்ணியமிக்க முதலாம் கலீபா அபூபக்கர்(ரலி) வெற்றிமிக்க தலைவராக விளங்கினார் ஆனால் இரண்டே ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து நோய்வாய்ப்படுகிறார். எனினும் கண்ணியமிக்க முதல் கலீபா அபூபக்கர்(ரலி) தாம் மரணிக்கும் தருவாயில் தம் சக தோழர்களுடன் ஆலோசணை மேற்கொண்டு குழப்பமான காலகட்டத்தில் தெளிவான முடிவை எடுப்பவர்களில் சிறந்தவரும் அமீருல் முஃமினீனுமாகிய உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீபாவாக முன்மொழிந்துவிட்டு மரணிக்கிறார்கள்.

இங்கு ஆச்சரியம் என்னவெனில் முதலாம் கலீபாவை தேர்ந்தெடுத்த பாக்கியம் இரண்டாம் கலீபாவுக்கும் இரண்டாம் கலீபாவை தேர்ந்தெடுத்த பாக்கியம் முதலாம் கலீபாவுக்கும் என்பதே இந்த பாக்கியம் அரபுலகச் சக்கரவர்த்தி முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றியதால் கிடைத்தாகவே காணப்படுகிறது. அதன்படி அமீருல் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு)              ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல்ஆகிர் 23-ந்தேதி (கி.பி 23-08-633-ம் தேதி) பதவியேற்றார்.


உமர் (ரலி) ஆட்சிக் காலம் பொற்காலம்

  • கூபா, புஸரா உள்ளிட்ட நகரங்களை நிர்மாணித்தார்.
  • அனைத்து நகரங்களிலும் நீதிபதி (காஜி‌‌‌‌‌‌‌)களை இவரே முதன்முதலில் நியமித்தார்.
  • கடிதங்களை எடுத்துச்செல்ல உதவியாக அஞ்சலகங்களை ஏற்படுத்தினார்.
  • ஹிஜ்ரி 18-ல் பாரசீகர்களின் நாணய வடிவில் நாணயங்களை வெளியிட்டார்.
  • இவரின் ஆட்சியில் வேத வசனங்கள் மறைச் சட்டங்கள் முழு மலர்ச்சி பெற்றன.
  • சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களும் இறைநீதியின் நிழலில் நிம்மதியான வாழ்வை அனுபவித்தனர்.
  • இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஆட்சியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
  • தமது அரபியப் படைகள் வெற்றிகொண்ட இந்தப் பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்யத் தக்க சட்ட திட்டங்களை வகுத்தார்.
  • அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகிக் கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தார்.
  • பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லீம் ஆட்சியாளர் களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும் என்று முழக்கமிட்டார்.
  • குறிப்பாக மாற்றுமதத்தவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேறுமாறு செய்யக்கூடாது என்றும் சூழுரைத்தார் இதன் காரணமாகவே முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு உமர் (ரலி) ஒரு முக்கியக் காரணமானவராக விளங்கினார்.

வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்கள்

ஏழை பெண்ணுக்காக முதுகில் மூட்டை சுமந்த கலீபா உமர் (ரலி)

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போதும மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது.

நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

இதோ அந்த உறையாடல்

உமர் (ரலி)     

“குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?” 

பெண்மணி     

அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்” 

உமர் (ரலி)     

“அடுப்பில் என்ன இருக்கிறது?” 

பெண்மணி   “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக் கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.


அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத்தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் பதறியவாறு, இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும் என்றார்!

உதவியாளர் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்றார் உதவியாளர்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அப் பெண்மணி இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான்.

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்!


ஏழை கர்பிணிக்கு தன் மனைவியைக் கொண்டு பிரசவம் பார்த்த கலீபா உலகில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததுண்டா? நடக்குமா?


மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.

நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே ஒரு மனிதர்தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டு முறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு,

நீ போக மாட்டாயா….?

உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரிய வில்லையே…?

வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்று கிறது…?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக,

“நண்பரே..! நீர் நினைப்பது போல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர் போல் தோன்றுகிறது. அதனால் தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்..?’

என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற,

“அவர் ஏன் கூச்சலிட வேண்டும்..?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கி விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர்.

“ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்..?’ என உமர் வினவியதும்,

“மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன்.

“நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள். கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா..?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார்.

“கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு.

நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பி விட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

மனிதருடன் உமர் (ரலி) உறையாடல்

மனிதர்        

“இந்நாட்டிற்கு உமர் தானே இப்போது தலைவர்…?’

உமர் (ரலி)     

“ஆமாம்.’

மனிதர்      

 “அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே..!’

உமர் (ரலி)  

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

மனிதர்      

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா….?’

உமர் (ரலி) 

“பார்த்திருக்கிறேன்.’

மனிதர்  

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

உமர் (ரலி)  

“அவரிடம் ஏது பணம்…?’ 

மனிதர

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்…?’

உமர் (ரலி)

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே……………..!  உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.  அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு“நண்பரே…! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்…? என்ன நடந்துவிட்டது..?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்..?’

என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப் போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்…?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே…?

ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே…!

நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.



மூதாட்டியின் உத்தரவுக்கு கட்டப்பட்ட கலீபா உமர் (ரலி)



திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்கு தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது.

உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள்.

மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள்.

உடனே ஒரு மூதாட்டி, உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

அம்மூதாட்டி

“”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.


புகழை வேறருத்த கலீபா உமர்பின் கத்தாப்


உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களின் பெயர்களில் இதுவும் ஒன்று. இறைவனின் வாள் (சைபுல்லாஹ்) என்ற பெயர் பெற்ற காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் வீர வாளையும், சாகசங்களையும் எதிர்க்க முடியாமல் சக்திமிக்க ரோம சாம்ராஜ்ஜியமும், பாரசிக ஏகாதிபத்தியமும் தலைகுப்புற வழிந்தன. கி.பி 7 நுற்றாண்டில் அவரது பெயரைக் கேட்டு நடுங்காத உலக அரசுகள் இல்லை என்ற சொல்லலாம்.

காலித் பின் வலீத்(ரழி) அவர்கள் தலைமை ஏற்று சென்ற எல்லா போர்களிலும் வெற்றி வாகை சூடினார். அப்படிப்பட்ட மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களை, ஒரு போர்களத்தில் ஒரே ஒரு உத்தரவு முலம் தளபதி பதவியிலிருந்து உமர்((ரழி) அவர்கள் நிக்கிவிட்டார்கள்.

சிரியா நாட்டிலே ரோமானிய பெரும் படைகளை எதிரித்துப் போராடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளின் தளபதியாகிய காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு போர்க்கள முகாமில் உமர்((ரழி) அவர்களின் கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில்,

தளபதி காலித் அவர்களுக்கு உமர் பின் கத்தாப் எழுதிக் கொள்வது. இந்த உத்தரவு முலம் காலித் அவர்கள் தளபதி பதவியிலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபூ உதைபா அவர்கள் நியமிக்கபடுகிறார். உடனடியாக காலித் அவர்கள் பொறுப்புகள் அனைத்தையும்அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்குத் திருப்ப வேண்டும்.”

படைவீரர்களிடம் இந்த கடிதம் பகிரங்கமாகப் படிக்கப்பட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்லாத்திரிக்க வாழ்நாளையே அரிப்பணித்தவர். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து தளபதிப்  பதவி விகித்து வருபர். போர்க்களத்திலே இணையற்ற  செல்வாக்கும், நன்மதிப்பும் பெற்றிருப்பார் காலித் பின் வலீத்(ரழி) அவர்கள்.

அப்படிப்பட்ட மாவிரர் காரணமின்றி விலக்கப்படுவதை ஏற்றுக் கொள்வாறா? கலிபாவின் உத்தரவை அவர் ஏற்க மறுத்து புரட்சிக் கோடி உயர்த்தினால் என்னவாகும்? இஸ்லாமிய குடியரசே கலகலத்துவிடுமே!! முஸ்லிம் படை விரர்களிடம் கவலை பற்றிக்கொண்டது.

ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை. ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை காலித் பின் வலீத்(ரழி) அவர்கள். உடனடியாக பொறுப்புகள் அனைத்தையும் அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்கு புறப்பட்டார்.

மதீனா வந்தடைத்த தளபதி காலித் பின் வலீத்(ரழி) அவர்கள், அவரது நீண்டநாள் நண்பரும், கலிபாவான  உமர்((ரழி) அவார்களை காணச் சென்றரர். இரு நண்பர்களும் கட்டித் தழுவி கொண்டுகுடும்ப நலன்களைப் பரிமாறிக் கொண்டனர். கடைசியாக காலித் பின் வலீத்(ரழி) அவர்கள்நண்பரே !! தளபதி பதவியிலிருந்து நான் ஏன் விலக்கப்பட்டேன் என்பதை அறியலாமா? என்று கேட்டார்.

அதற்கு உமர்(ரழி) அவர்கள்,

உங்களது வீரமும்வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனது புகழ்பாட வேண்டிய மக்களின் நாவுகள் உங்கள் புகல்பாடுவதைக் கேட்டேன்என்னைப் போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக் கூடிய சாதாரண மனிதர்தான் காலித் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிடடால் நிலைமை மிஞ்சி விடுமென அஞ்சினேன். ஆகவே விளக்கினேன். இதன் முலம் பொதுமக்களையும்உங்களையும்என்னையும் கூடத்தான் புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக நம்புகிறேன்.

நீங்களும் நானும் இறந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள். இஸ்லாத்தின் பெருமையோ என்றும் நிலைத்து நிற்க வேண்டியது என்பது நமது இலட்சியம். அந்தப் பெருமை காலித் இல்லாவிட்டாலும்உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும்.
உங்களை விலக்கியது முலம் அதை ஓரளவு நிருபித்துவிட்டதாக நம்புகிறேன் என்று கூறினார்கள்.

உமர்(ரழி) அவர்களின் பதிலை கேட்டு மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தவழ்ந்தது.


உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் மரணமும் கட்டளையும்


கிபி 644-ம் ஆண்டு பஜ்ரு நேரத் தொழுகையை நடத்திகொண்டிருந்த போது முஸ்லிம் போல் வேடம் தரித்த பைரோஸ் என்ற பாரசீக அடிமையால் குருவாளால் ஆறு முறை குத்தப்பட்டார் உமர் (ரலி). மூன்று நாட்களுக்கு பின் மரணமானார். (இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்)

இறக்கும் முன் இவர் ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப் பிந்திய கலீபாவாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் பணித்தார். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அடுத்த கலீபாவாக அந்தக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுக்கு கிடைத்த பாக்கியம்!

எங்கள் இரண்டாம் கலீபாவும் சத்திய சஹாபிய நபித் தோழருமான உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபிவழியை அச்சுபிசகாமல் வாழ்ந்துக்காட்டியதற்காக அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியம் என்ன தெரியுமா? இறந்த பின்னர் இவரின் உடல் மதீனாவில் அரேபிய சக்கரவர்த்தி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கும் அரபுலக முதல் கலீபா அபூபக்கர் (ரலி)யின் கல்லறைக்கும் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டதுதான் இந்த பாக்கியத்தை நம்மில் எவராது பெற இயலுமா? ஆதாரம்

உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், ‘உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, 

‘(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை.

(நீங்கள் தாம் அத்தகைய மனிதர்) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி ( ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர்  (ரலி) அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன்.

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்” என்றும் ‘நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்” என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் புஹாரி : 3685

முடிவுரை

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது அதை யாருக்கும் எதற்கும் கொடுக்கக்கூடாது என்று வாதாடி வாழ்ந்துகாட்டிய உத்தம நபித்தோழர் உமர் பின் காத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதளுக்கிணங்க இந்த கட்டுரையின் தலைப்பை மிகச் சாதாரணமாக என் அருமை கலீபா உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) என்று வைத்துள்ளோம்! இதில் தவறு ஒன்றுமில்லையே உங்கள் மனசாட்சியை தட்டிப் பாருங்கள்!

சாதாரண கவுண்சிலர் பதவி கிடைத்துவிட்டாலே ஜாம்பவான், மாண்புமிகு, இதயதெய்வம், வைக்கம் வீரன், மஹாத்மா, புரட்சித் தலைவன், காங்கேயக் காளை, தென்னாட்டு சிங்கம், லொட்டு லொசக்கு என்று பெயர்களை வைத்துக்கொண்டு இன்று நாம் போஸ்டர் ஒட்டி மகிழ்கிறோம் ஆனால் உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் காலித் இல்லாவிட்டாலும்உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும் என்று கர்ஜித்த எங்கள் உத்தம நபித்தோழருக்கு நாம் எவ்வாறு புகழ்மாலை சூட்ட இயலும் அவ்வாறு சூட்டினால் நாம் அவரை இகழ்ந்த நபர்களில் ஒருவராக ஆகிவிடுவோமே! எனவே என் அமீருள் மூமினீனை நாம் கண்ணியப்படுத்தும் விதமாக என் அருமை கலீபா உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) என்று கூறியுள்ளோம். இதோ அவரின் அமுத மொழிகள்

 

உங்களது வீரமும்வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனது புகழ்பாட வேண்டிய மக்களின் நாவுகள் உங்கள் புகல்பாடுவதைக் கேட்டேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக் கூடிய சாதாரண மனிதர்தான் காலித் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிடடால் நிலைமை மிஞ்சி விடுமென அஞ்சினேன். ஆகவே விளக்கினேன். இதன் முலம் பொதுமக்களையும்உங்களையும்என்னையும் கூடத்தான் புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக நம்புகிறேன்.

நீங்களும் நானும் இறந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள்இஸ்லாத்தின் பெருமையோ என்றும் நிலைத்து நிற்க வேண்டியது என்பது நமது இலட்சியம்அந்தப் பெருமை காலித் இல்லாவிட்டாலும்உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும்.

 

உங்களிடம் நாம் மன்றாடிக் கேட்பதெல்லாம் வீணான காரியங்களான கத்தம் ஃபாத்திஹா, தர்காஹ் இணைவைப்பு வழிபாடு, காதிரி ஹல்கா முரீது தரீக்கா! தட்டு, தகடு, தாயத்து, கொடிமரம், சந்தனகூடு, சுப்ஹான மவ்லூது, மீலாது கந்தூரி விழாக்கள் மற்றும் இன்ன பிற நபிகள் நாயகம் (ஸல்) காட்டித்தராத மார்க்கம் அனுமதிக்காத எந்த கலீபாவும் செய்யாத இந்த ஈனச் செயல்களான புதுமை பித்அத்களை ஒழித்துக்கட்ட நல்லுணர்வு பெற முயற்சிப்பீராக உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவீராக என்பதே!

எவரெல்லாம் சினிமா கூத்தாடிகளை தங்கள் அழகிய முன்மாதிரியாக(ரோல் மாடலாக) ஏற்ற நிலையிலேயே மரணிக்கிறார்களோ அவர்களெல்லாம் வெட்கப்பட்டு கூனி குருகி மறுமையில் கைசேதப்பட்டு நரகத்தின் தனலை எதிர்நோக்கி நிற்பார்கள் எவரெல்லாம் சத்திய சஹாபாக்களை தங்கள் அழகிய முன்மாதிரியாக (ரோல் மாடலாக) ஏற்று சத்திய மார்க்கமான இஸ்லாத்தையும் ஏகத்துவத்தையும் ஏற்று மரணிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் நிழலில் இழைப்பாருவார்கள்! நீங்கள் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அது கண்ணியமானதாக இருக்க வேண்டும் நாம் ஆசைப்படுவதெல்லாம் சத்திய சஹாபாக்களை நம் ரோல் மாடலாக இருக்கவேண்டும் என்பதே! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

 

அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; (அல் குர்’ஆன் 25:63)

 

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 4:36)

 

நன்றி – ஜஜாகல்லாஹ் கைரன்

மேற்கண்ட கட்டுரையில் என்னில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்த முற்படுவோம்! உண்மை கூற நாம் என்றும் வெட்கப்படமாட்டோம் இது எமது ஒருவரின் ஆக்கம் மட்டுமல்ல மேற்கண்ட கட்டுரை வரைய கீழ்கண்ட தளங்களிலிருந்து கல்வி ஞானத்தை பெற்றுக் கொண்டோம் இவர்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்!

https://ta.wikipedia.org/s/85t

http://nallurhameed.blogspot.in/2015/06/blog-post_74.html

https://azeezahmed.wordpress.com

http://islamicuprising.blogspot.in/2015/09/blog-post.html

http://islamiyapuram.blogspot.in/2014/12/blog-post_70.html

 

தாவா பணிக்காக உமர் பின் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கட்டுரை வரைய விரும்பிக் கேட்டுக்கொண்ட கண்ணியமிக்க சகோதரியின் மீதும் ரஹ்மத்துல் ஆலமீன் தன் கண்ணியம் என்னும் போர்வையை போர்த்துவானாக! அவரின் உள்ளத்தின் வேதனையை இலேசாக்குவானாக இழந்த விலைமதிப்பற்றபொக்கிஷங்களை மீட்டுத் தருவானாக! இம்மையிலும் மறுமையிலும் நல்லோர்களுடன் வாழச் செய்வானாக என்று பிரார்த்திக்கிறோம்!

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். (அல்குர்ஆன் 61:8)









என் அருமை கலீபா என் அருமை கலீபா Reviewed by Kings of Islamic e-Dawah on January 09, 2021 Rating: 5

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்

January 01, 2021

 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்





உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.


(அல்குர்ஆன் 16:68-69)


And thy Lord revealed to the bee: Make hives in the mountains and in the trees and in what they build. Then eat of all the fruits and walk in the ways of thy Lord submissively. There comes forth from their bellies a beverage of many hues, in which there is healing for men. Therein is surely a sign for a people who reflect.


Al Quran_16:68 & 69


இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.


பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.


உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.


இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள. தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.


தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா?


தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம் புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம் தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.


தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம். தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம். தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம். இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம்.


மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம். தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம். காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.


அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. 


📃Kings of Islamic e-Dawah

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம் தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம் Reviewed by Lizarmi Games on January 01, 2021 Rating: 5

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?

January 01, 2021

 வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?







படுக்கலாம்.


குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன.


 


முதல் ஹதீஸ்


ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூ ஹூரைரா (ரலி)

நூல் திர்மிதி (2692) அஹ்மது (7524, 7698)


 


இந்த அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது – ஆதாரப்பூர்வமானது – கிடையாது என இமாம் புகாரி அவர்கள் கூறுகின்றனர்.


(التاريخ الصغير – (ج 1 / ص 152)


682 – وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم نحوه ولا يصح


நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)., அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா , அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அமர் என்ற அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது கிடையாது என இமாம் புகாரி கூறியுள்ளார்கள்


 


இரண்டாவது ஹதீஸ்


எந்த ஹதீஸை முஹம்மத் பின் அமர் என்பார் துஹ்பா என்பாரிடமிருந்து அறிவிக்க் வாய்ப்பு உள்ளதாக மேற்கண்ட இமாம்கள் கருதுகிறார்களோ அந்த ஹதீஸ் இது தான்.


22510 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ ابْنِ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ عَنْ أَبِيهِ قَالَ ضِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَنْ تَضَيَّفَهُ مِنْ الْمَسَاكِينِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلِ يَتَعَاهَدُ ضَيْفَهُ فَرَآنِي مُنْبَطِحًا عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ لَا تَضْطَجِعْ هَذِهِ الضِّجْعَةَ فَإِنَّهَا ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ رواه أحمد


தஹ்பா அல்கிபாரி (ரலி) அறவிக்கிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விருந்தளித்த ஏழைகளில் நானும் ஒருவனாக விருந்தில் கலந்து கொண்டேன். தமது விருந்தினரைக் கவனிக்க நபிகள் நாயகம் ஸல அவர்கள் வந்த போது நான் வயிற்றின் மீது அதாவது குப்புற படுத்து இருப்பதைப் பார்த்தார்கள். தமது காலால் என்னை உசுப்பிவிட்டார்கள். நீ இவ்வாறு படுக்காதே. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத படுக்கும் முறையாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : துஹ்பாவின் மகன் எயீஷ்

நூல் :அஹமத் 25510


துஹ்பாவின் மகனிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பவர் முஹம்மத் பின் அமர் ஆவார். இவரைப் போலவே இன்னும் பலர் இந்த ஹதீஸை துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இவரும் துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இது தான் சரியானது. இவர் அபூஹுரைரா வழியாக அறிவிப்பதாக வருவது சரியான அறிவிப்பு அல்ல.


அப்படியானால் அபூஹுரைரா ரலி வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் தானே பலவீனமானது? இந்த ஹதீஸ் பலவீனமானது அல்லவே? இந்த ஹதீஸ் அடைப்படையில் குப்புறப்படுக்க்க் கூடாது என்று கூறலாமா என்ற கேள்வி எழலாம்.


ஆனால் இந்த ஹதீஸ் வேறு காரணங்களால் பலவீனமடைகின்றது. அதாவது இந்த ஹதீஸை அறிவுக்கும் பலர் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கின்றனர். அதாவது இள்திராப் எனும் குழப்பம் இதில் அதிகமாக உள்ளது.


 


மற்றொரு ஹதீஸ்


18654حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ الشَّرِيدِ يَقُولُ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ فَقَالَ هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ رواه أحمد


18639 حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ عَمْرٍو عَنِ الشَّرِيدِ أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الرَّجُلَ رَاقِدًا عَلَى وَجْهِهِ لَيْسَ عَلَى عَجُزِهِ شَيْءٌ رَكَضَهُ بِرِجْلِهِ وَقَالَ هِيَ أَبْغَضُ الرِّقْدَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ رواه أحمد


அம்ர் பின் அஸ்ஸரீத் கூறுகின்றார் நபியவர்கள் தன்னுடைய முகம்குப்புற படுத்துக் கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார் என்று கூறினார்கள்.


நூல் அஹ்மத் (18654, 18639)


இந்த செய்தியை அறிவிக்கின்ற அம்ர் பின் அஸ்ஸரீத் என்பவர் நபித் தோழர் கிடையாது. இவர் ஸஹாபாக்களுக்கு அடுத்தகாலத்தைச் சார்ந்த தாபிஈ ஆவார்.


எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த முர்ஸல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.


அஸ்ஸரீத் (ரலி) அவர்களிடமிருந்து தனக்கு கூறியவர் யார்? என்பதை அம்ர் பின் அஸ்ஸரீத் குறிப்பிடவில்லை. எனவே இதுவும் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.


 


கருத்தும் சரியானது அல்ல


எந்த மனிதராக இருந்தாலும் அவர் ஒரே விதமாகப் படுத்து உறங்கி எழ முடியாது. பலவிதமாகப் புரண்டு படுப்பது தான் மனிதனின் இயல்பாக உள்ளது. அவ்வாறு புரண்டு படுப்பவனுக்கு தான் குப்புறப்படுத்து இருக்கிறோம் என்பதே தெரியாது. மனிதனின் சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் தான் மார்க்கம் தலையிடும். அல்லாஹ் கேள்வி கேட்பான். மனிதனை மீறி நடக்கும் எந்தக் காரியத்துக்கும் அவன் பொறுப்பாளியாக மாட்டான். இந்த அடிப்படை பல குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிமொழிகள் மூலமும் அனைவரும் அறிந்து வைத்துள்ளது தான்.


மேற்க்ண்ட ஹதீஸ்களில் ஒருவர் படுக்கைக்குச் செல்லும் போது குப்புறப்படுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்ததாக கூறப்படவில்லை. நன்றாக ஆழ்ந்து உறங்கும் போது சஹர் நேரத்தில் வந்து பார்த்து தூங்குபவரை எழுப்பி விட்டு கண்டிப்பதாக வந்துள்ளது. ஆழ்ந்து தூங்கும் போது ஒருவர் குப்புறப்படுத்தால் அது அவருக்கே தெரியாமல் நடப்பதாகும். அதை எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ள் கண்டிப்பார்கள்?


மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படுத்து உறங்கும் மனிதரைக் கையால் எழுப்பாமல் காலால் உதைத்து எழுப்பினார்கள் என்பது அவர்களின் நற்குணத்துக்கு மாற்றமாகத் தெரிகிறது என்பதையும் கவனிக்கும் போது இது கூடுதல் பலவீனத்தை அடைகிறது.


படுக்க ஆரம்பிக்கும் போது வலது புறமாக ஒருக்களித்து படுப்பது நபிவழியாகும். அதைப் பேணுவதன் மூலம் நன்மைகளை அடையலாம். ஒருக்களித்து படுத்தபின் புரண்டு படுத்து விட்டால் அதனால் நன்மைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. படுக்கும் போதே குப்புறப்படுத்தால் அதனால் சுன்னத்தை விட்டதால் நன்மை கிடைக்காமல் போகும். அது நரகத்துக்குக் கொண்டு செல்லும் குற்றமாக ஆகாது.


📃Kings of Islamic e-Dawah

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா? வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா? Reviewed by Lizarmi Games on January 01, 2021 Rating: 5
Powered by Blogger.